தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு கூட்டம் குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் தோழர் பி சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் தோழர் கே முகமது அலி கலந்து கொண்டார். மருதூர் காவிரி தடுப்பணை உடனடியாக கட்டிடவும், 2008 இல் மாயனூர் கதவனைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.