திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். சண்டிகரில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாம் தமிழர் கட்சியினரால் தனது குடும்பத்தினர் இணையதள அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், அக்கட்சி கண்காணிக்கப்பட வேண்டியது எனவும் எஸ்.பி. வருண்குமார் பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், டிஜிபி சங்கர் ஜிவாலிடம் நாதகவின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகாரளித்துள்ளார்.