ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படம் திரையிட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி பொறுப்பற்ற முறையில் வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.