வயலில் தேங்கிய மழைநீர், பயிர் நடவு செய்ய முடியாமல் திணரல்

84பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், வீரவள்ளி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகின்றனர்.

தற்போது குறுவை சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நிலத்தினை உழுது விதை நெல் நாற்று போட்டுள்ளனர்.

தற்போது நெல் நாற்று நடவு நட தயாராக இருந்த நிலையில் கள்ளப்பள்ளி மற்றும் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழை காரணமாக 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது.

இதனால் வாழை, வெற்றிலை கொடிக்கால் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் தண்ணீர் முழங்கால் அளவு நிற்பதால் நாற்று நட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் விவசாய நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியவாறு இருப்பதால் சேதம் அடையும் வாய்ப்புள்ளதாகவும் இதனால் உழவுப் பணிகளுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் வரை செலவு செய்த நிலையில் மீண்டும் புதிதாக நெல் நாற்று நடும் பணிகளை மேற்கொண்டால் கூடுதல் செலவினங்கள் ஏற்படும் என்றும், வடிகால் வாரியை சரியான முறையில் தூர் வாராமல் இருந்ததே இதற்கு காரணம் எனவும் எனவே அதனை அரசு அதிகாரிகள் வடிகால் வாரியினை தூர்வாரி விவசாயம் செழித்திட வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி