சிறு நடைபாலம் சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

51பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகவதி அம்மன் கோவில் தெரு வழியாக தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலின் குறுக்கே சிறு நடைபாலம் உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த சிறு பாலத்தின் வடபுறம் பகுதியில் அடிப்பகுதி சேதமாகி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஒரு மரத்தின் விழுது பாலத்தின் மேல் சாய்ந்துள்ளது. பாலத்தை சீர்படுத்தி தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி