பால்வண்டி கவிழ்ந்த விபத்து, 12 ஆயிரம் லிட்டர் பால் வீண்

59பார்த்தது
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் சிவா. இவர் ஆவின் பால் ஈச்சர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கரூரிலிருந்து ஆவின் பாலை ஈச்சர் டேங்கர் வேன் லாரியில் கொண்டு வந்துள்ளார்.

குளித்தலை அருகே தாளியாம்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்தும் பாலினை ஏற்றி செல்வதற்காக அய்யர் மலை தாளியாம்பட்டி சாலையில் வந்துள்ளார்.

சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே பைக் வந்துள்ளது. பைக்கின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் டேங்கர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேன் டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார். தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் டேங்கரில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தரையில் கொட்டி வீணானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி