மருதூர் பேரூர் கழக திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

54பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பதவி ஏற்றதை தொடர்ந்து மருதூர் பேரூர் கழக திமுக சார்பில் மருதூர் நகர செயலாளர் ரவீந்திரன் ஆணைக்கிணங்க மேட்டுமருதூர் 4 ஆவது வார்டு கிளை பொருளாளர் தங்கதுரை தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் செய்தனர். இந்நிகழ்வில் மருதூர் பேரூர் கழக நான்காவது வார்டு கிளை செயலாளர் முருகானந்தம், நான்காவது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெரிய பாலம் பேருந்து நிறுத்தம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி