உலகளவில் உள்ள 195 நாடுகளில், ஆஸ்திரேலியா பல சிறப்புக்கு சொந்தமானது. தொழில், மக்களின் வளர்ச்சி, மேம்பாடு, இயற்கை எழில் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு பிரபலமானது. அதேபோல், நிலவை விட மிகப்பெரிய அளவை கொண்ட நாடு என்ற பட்டியலிலும் ஆஸ்திரேலியா இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். ஆஸ்திரேலியாவின் அகலம் கிழக்கில் இருந்து மேற்கே 4000 கிலோமீட்டர் ஆகும். ஆனால், நிலவின் விட்டம் 3,474 கிலோமீட்டர் தான்.