நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

55பார்த்தது
திமுக கரூர் மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி இன்று(செப்.29) மீண்டும் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார். அதேபோல் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பதை முன்னிட்டு குளித்தலை நகர திமுக சார்பில் நகர அவை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் குளித்தலை பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நகர பொருளாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர்கள் ஆனந்த லட்சுமி, சரவணன், சக்திவேல், பொன்னர், பிச்சை, நகர தொண்டர் அணி அமைப்பாளர் மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி