கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணேசபுரம் அடுத்த கல்லு மடையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கடந்த 25ஆம் தேதி அன்று மர்ம நபர்கள் ஆழ்துளை கிணற்றின் அருகே இருந்த மின் வயர், ஸ்விட்ச் பாக்ஸ், பைப் லைன் ஆகியவற்றை சேதப்படுத்தி அங்கிருந்த மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர். விவசாயி பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.