காவிரி பாலத்தில் பழுதடைந்த பள்ளங்களை சரிசெய்ய கோரிக்கை

66பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை இணைக்ககூடிய தந்தை காவிரி பாலமானது கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போதைய முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

50 ஆண்டுகால பழைமைவாய்ந்த இந்த பாலத்தின் வழியே மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி பொதுமக்களும், அதேபோல் பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், முசிறி, துறையூர், பெரம்பலூர், சென்னையில் இருந்து வரும் பொதுமக்களுக்கும், சரக்கு வாகனங்களுக்கும் குளித்தலை- முசிறி பெரியார் பாலம் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

கடந்த சில வருடங்களாக காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வந்ததால் குளித்தலை பெரியார் பாலத்தில் தூண்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனால் பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டது. பாலத்தின் மேல் பகுதியிலும் ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டு வருவதும், இதனை பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை தார் ஊற்றி ஒட்டுபோட்டு வைத்துள்ள நிலையிலும் அவ்வப்போது பாலத்தில் கான்கிரீட்கள் பெயர்ந்து கொண்டிருக்கிறது.
தற்போது தொடர் மழையினால் பெரும் ஆபத்து ஏற்படாதவகையில் முன்னெசெரிக்கையாக தமிழக அரசு உடனடியாக இந்த பாலத்தினை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி