கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் காவிரி ஆற்றுப்படுகையில் நேற்று இரவு சட்ட விரோதமாக ஆற்று மணலை டாரஸ் லாரியில் கடத்திக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசாரை பார்த்ததும் லாரியை அங்கே விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பிறகு ஒரு யூனிட் ஆற்று மணலுடன் டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கண்டியூர் பகுதியைச் சேர்ந்த சிபி சக்கரவர்த்தி (30), கார்த்திகேயன் (38), குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (41), ஐநூற்று மங்கலத்தைச் சேர்ந்த ராஜாராம் (35) ஆகிய 4 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.