விசாரணைக்காக வந்த தொழிலாளியை திட்டிய 2 பெண்கள் மீது வழக்கு

50பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா குப்பனம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (51). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி, பூங்கொடி ஆகியோருடன் நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இரு தரப்பினரும் விசாரணைக்காக கடந்த 22ஆம் தேதி குளித்தலை காவல் நிலையம் வந்துள்ளனர். அப்போது ஈஸ்வரி, பூங்கொடி ஆகிய இருவரும் காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கடை முன்பு முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முருகன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி