60 நாட்கள் கடந்து ரோப் கார் சேவை இன்று முதல் தொடக்கம்

55பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலிலானது மிகவும் பிரசித்த பெற்ற திருக்கோவிலாகும். 1178 அடி உயரமுள்ள இந்த மலையின் 117 படிக்கட்டுகள் கொண்டது. பக்தர்கள் சிரமமின்றி சென்றுவர ரோப் கார் வசதி அமைக்கப்பட்டது. ரோப்கார் தொடங்கப்பட்ட மறுநாளே ரோப் கார் சேவை பழுது காரணமாக கடந்த 60 நாட்களாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை ரோப்கார் பெட்டிகளுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பாதுகாப்பாக மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து மீண்டும் அடிவாரம் திரும்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி