மருதம்பட்டி காலணியில் வேலி அமைக்கும் போது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், மணவாடி, கத்தாழைப்பட்டி அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாயவன் வயது 30.
இவர் அக்டோபர் 15 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மருதம்பட்டி காலனி பகுதியில் நகுல்சாமி என்பவரது தோட்டத்தில் வேலி அமைத்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்து வாந்தி எடுத்துள்ளார் மாயவன்.
உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மாயவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த மாயவனின் தந்தை சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாயவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.