விசிக சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம்

80பார்த்தது
விசிக சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி (எ) வன்னியரசு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பாலராஜபுரம் ஊராட்சி ஆண்டிபாளையத்தைச் சார்ந்த உதயகுமார் திமுகவிலிருந்து விலகி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதில் பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் இரா. முருகேசன், கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா. உதயநிதி, எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் இரா. லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மொ. பிரபாகரன், ஆ. பொன்னுச்சாமி, பா. பார்த்திபன், ப. பெரியசாமி, க. சுபாஷ், கா. சௌந்தர்யன், தி. மாயவன், ப. பூபதி , ச. வீரமணி, ரெ. கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி