கரூர் மாவட்டம் கடவூர் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் லாட்டரி விற்ற சண்முகவேல் (37), பாலசுப்பிரமணியன் (55) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 14 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.