கரூர் மாவட்டம் புலியூர் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து குணசேகரன் மனைவி சுசிலா அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை