திருச்சி: அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் அய்யப்பன் (52). இவர், 8ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மாணவிகளுக்கு அய்யப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் அய்யப்பன் கைது செய்யப்பட்டார்.