பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) சந்திக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆன்ந்த், “பிற்பகல் 12 முதல் 1 மணிக்குள் பரந்தூர் கிராம மக்கள், போராட்ட குழுவினர் ஆகியோரை வீனஸ் திருமண மண்டபத்தில் வைத்து விஜய் சந்திக்கவுள்ளார். இதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை” என்றார்.