கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரி 6% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்த நிலையில் நாட்டில் தங்கத்தின் இறக்குமதி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்வதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருப்பதால் வரும் பட்ஜெட்டில் இறக்குமதி மீதான வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது நடந்தால் தங்கம் விலை உயரும்.