திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் மது அருந்தும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனின் தந்தை மற்றும் சித்தப்பா அவனுக்கு மது கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனின் சித்தப்பாவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தந்தையை தேடி வருகின்றனர்.