மது போதைக்கு அடிமையானவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.

81பார்த்தது
உன் வீரராக்கியத்தில் மது போதைக்கு அடிமையானவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா,
உள் வீரராக்கியம், கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் குமார் வயது 49.

அண்மை காலமாக குமார் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.

கடந்த நவம்பர் 18ஆம் தேதி இரவு 8 மணி அளவில் மது அருந்தும் போது, மனவிரக்தியோடு மது அருந்திய குமார், மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.

இதனை அறிந்த குமாரின் மனைவி அழகேஸ்வரி வயது 40 என்பவர், உடனடியாக தனது கணவன் குமாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த குமார் சிகிச்சை பலனின்றி நவம்பர் 27ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அழகேஸ்வரி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவஇடத்திற்க்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி