மகாராஷ்டிர மாநிலம் பண்டாராவில் இருந்து கோண்டியாவுக்குச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து பண்டாரா டிப்போவில் இருந்து கோண்டியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கோண்டியா-அர்ஜுனி சாலையில் பிந்த்ரவன தோலா கிராமம் அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.