தமிழர்களின் பண்பாட்டு மரபுகளில் ஒன்று வாழை இலையில் விருந்து பரிமாறுவது. வாழை இலைக்கு பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. சூடான உணவை வாழை இலையில் சாப்பிடுவது குடலுக்கு ஏற்றது. பசுமையான இலையில் சூடான உணவை பரிமாறும் பொழுது இதில் உள்ள பச்சையம் சத்துக்கள் உணவுடன் சேர்ந்து நம் உடலுக்கு கிடைக்கும். எனவே தான் தமிழர்கள் வாழை இலையில் உணவு பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.