கரூர் - Karur

வீட்டை அபகரித்த திமுக ஒன்றிய செயலாளர் மீது உறவினர் புகார்.

கரூரில், வீட்டை அபகரித்த திமுக ஒன்றிய செயலாளர் மீது எஸ்பி இடம் உறவினர் புகார். கரூர் சின்னான்டாங் கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி வயது 55. இவர் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விறகு கடை மொத்த வியாபாரம் நடத்தி வருகிறார். இவரது வீட்டை அபகரித்து விட்டதாக, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் மீது, கரூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். இது தொடர்பாக அவருடன் வந்த அவரது வழக்கறிஞர் குணசேகர் தெரிவிக்கும்போது, 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ரூபாய் ஒன்றரை கோடி கடன் தீர்ப்பதற்காக சிவசாமி, தனது உறவினரான வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சாமிநாதனிடம் ஆவணங்களை கொடுத்து ஒரு கோடியே 30 லட்சம் அடமான கடனாக பெற்றுள்ளார். தற்போது 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வைத்துக்கொண்டு, தான் ஒன்றிய செயலாளர் எனக்கூறி, சொத்தையோ அல்லது பணத்தையோ தர மறுப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக, கரூர் எஸ் பி இடம் புகார் அளித்துள்ளதாகவும், எஸ் பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறினார்.

வீடியோஸ்

கரூர்
Jul 19, 2024, 14:07 IST/கரூர்
கரூர்

வீட்டை அபகரித்த திமுக ஒன்றிய செயலாளர் மீது உறவினர் புகார்.

Jul 19, 2024, 14:07 IST