

கரூர்: பணித்தள பொறுப்பாளர்களுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர்
கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சார மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணித்தள பொறுப்பாளர்களுக்கு, பணித்தளத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உபகரணங்களை பெற்றுக் கொண்ட பணித்தள பொறுப்பாளர்களும், கல்லூரி மாணவர்களும் அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.