

கரூர்: தைப்பூசதேர் திருவிழா துவக்கி வைத்த செந்தில் பாலாஜி
அருள்மிகு வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தைப்பூச தேர் திருவிழா அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்த இந்த கோவிலில் இன்று தைப்பூச தேர் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் கோவில் அறங்காவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி வெண்ணைமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, தேரை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பயபக்தியுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர். மலைக்கோவிலை சுற்றியுள்ள தேர்வழி பாதையில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என கூவி கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர்.