திருக்காம்புலியூர் பாலம்- லாரிகள் மோதல். ஒருவர் படுகாயம்

53பார்த்தது
திருக்காம்புலியூர் பாலம் அருகே லாரிகள் மோதல். ஒருவர் படுகாயம்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் வயது 26. ட்ரெய்லர் லாரி டிரைவர்.

இவர் மார்ச் 24ஆம் தேதி இரவு 11. 10 மணியளவில், தனது லாரியை கரூர் - திண்டுக்கல் சாலையில் ஓட்டிச் சென்றார்.

இவரது லாரி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் மேம்பாலம் அருகே வந்த போது,

அதே சாலையில் இவருக்கு முன்பாக சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, உத்தமனூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் வயது 27 என்பவர் ஓட்டிச் சென்ற ட்ரெய்லர் லாரி, திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், பிரேக் பிடித்ததால், அஜித் ஓட்டி சென்ற ட்ரெய்லர் லாரி கணேசன் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அஜித்துக்கு இடது கால் முட்டியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் தொடர்பாக அஜித் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை சாலை விதிகளுக்கு உட்படாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கணேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி