வட்டார வணிகவளமைய மேலாண்மை குழுவினர்க்கு புத்துணர்வு பயிற்சி.

85பார்த்தது
வட்டார வணிக வளமைய மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு புத்துணர்வு பயிற்சி.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, தான்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிருஷ்ணராயபுரம், கடவூர், க. பரமத்தி, தாந்தோணி பகுதிகளைச் சேர்ந்த வட்டார வணிகவள மைய மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்ற, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை சாதாரண கூட்டம் உதவி திட்ட அலுவலர் ராஜேஷ் மற்றும் மாவட்ட வளமைய பயிற்றுநர் முத்து தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் மகளிர் குழுக்கள் கடன் பெறுவது, தொழில் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றது.

மேலும், இந்த கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு திறம்பட செயல் செயல்படுவதற்காக புத்துணர்வு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.


இதில் சம்பந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சியை பெற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி