"தமிழ் பாடம் வேண்டாம்" என அரசு உத்தரவிட்டதாக பரவும் பொய்

53பார்த்தது
"தமிழ் பாடம் வேண்டாம்" என அரசு உத்தரவிட்டதாக பரவும் பொய்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என அரசு அறிவித்ததாக வதந்தி பரப்பப்படுகிறது. தமிழக மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று 2023 - 24ம் கல்வியாண்டுக்கு மட்டும் கட்டாயம் மொழி பாடமான தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் அறிவித்ததாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இது போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.