தமிழகத்தில் அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு

125371பார்த்தது
தமிழகத்தில் அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மார்ச் 20ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி மார்ச் 18ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி