விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வன்னியரசு என்கிற மகாமுனி தலைமையில் இன்று(செப்.9) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும், சங்கரமலைபட்டியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அருகே மயான கொட்டகை அமைத்து தர வேண்டும், முனையனூர் சமத்துவபுரத்தில் தார்சாலை மின்விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்த கூறி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.