பாஜக வேட்பாளர் ஆட்டோ ஓட்டி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

55பார்த்தது
கரூர் மாவட்டம், பவித்திரம், குப்பம், புன்னம் சத்திரம் ஆகிய பகுதிகளில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு வந்த வேட்பாளருக்கு நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பெண்மணி ஒருவர் வேட்பாளர் செந்தில்நாதனுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தார். அப்பகுதி பொதுமக்களிடம் பேசிய அவர் தனக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காலில் விழுந்து கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்ற செந்தில்நாதன் அங்குள்ள ஆட்டோ ரிக்க்ஷா ஒன்றை எடுத்து, ஆட்டோ ஓட்டுனராக மாறி பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம், தாமரை சின்னத்திற்கு நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட வேட்பாளர் செந்தில்நாதனுக்கு அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தாமரை மலர் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you