மீண்டும் உருவெடுத்த வடகலை தென்கலை பிரச்சனை

81பார்த்தது
மீண்டும் உருவெடுத்த வடகலை தென்கலை பிரச்சனை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் இரண்டாம் நாளான நேற்று (மே 21) நடந்த மண்டகப்படியின்போது தென்கலை பிரிவினர், பிரபந்தம் பாட முற்பட்டனர். அப்போது வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இரு தரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதி இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி