பாஜகவில் இணைகிறேன்.. சீமான் சவால்

126565பார்த்தது
தம்பி, நான் இங்கு இருக்கிறவரை நான்தான் கட்சியின் தலைவன். நான்தான் லீட் எடுத்து போவேன். என் கட்சியை ஒழிக்கிறேன் என்று பேசாதே. நான் இருக்கிறவரை என் லட்சியம் இருக்கும். என் லட்சியம் இருக்கிறவரை என் கட்சி இருக்கும் என அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். மேலும், வீரனாக இருந்தால் என்னுடைய கருத்தோடு மோது. தம்பி அண்ணாமலை என்னோடு விவாதத்திற்கு வா, பாரதிய ஜனதா தமிழ்நாட்டிற்கு எதற்கு? ஒரே ஒரு காரணம் சொல்லு, நான் கட்சியை விட்டு போய்விடுகிறேன். என் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதாவில் கட்சியினருடன் இணைந்து விடுகிறேன் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி