இது சாதாரண காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது

578பார்த்தது
இது சாதாரண காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது
திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின் அன்பாலும் உண்டு; அதனால்தான் அரசியலுக்கு நான் வந்தேன். திராவிட மாடல் என்பது ஒரு சிந்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை, இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிபார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி