அக்காவை ஓட ஓட அடித்து கொலை செய்த தம்பி

70பார்த்தது
அக்காவை ஓட ஓட அடித்து கொலை செய்த தம்பி
கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் பொம்மரலதொட்டியைச் சேர்ந்தவர் நரசம்மா(65). இவரது சகோதர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட சுகுரப்பாவை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்தார். இதற்காக கை மற்றும் காலில் செயினை கட்டி அவரை பார்த்து வந்தனர். இந்நிலையில் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து செயினை அடித்து கழற்றியுள்ளார். அதனை தடுக்க சென்ற தனது மனைவி மற்றும் சகோதரி நரசம்மாவை தாக்கியுள்ளார். இதனால் பயந்து ஓடிய நரசம்மாவை விடாமல் துரத்தி சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுகுரப்பவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி