மாமியாருடன் கள்ளத்தொடர்பு.. மகள் கொலை

84பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு நடந்த இந்த கொடூர சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுலேகா தோமர் என்ற பெண் தனது மருமகன் அங்கித்துடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அறையில் தனிமையில் இருந்ததை ​அங்கித்தின் 6 வயது மகள் பார்த்துள்ளார். இந்நிலையில் குழந்தை தனது மனைவியிடம் சொல்லிவிடுவாளோ என்று அங்கித்தும், மக்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் சுலேகாவும் பயந்துள்ளனர். இதனால் சிறுமியைகொலை செய்ய முடிவெடுத்த இருவரும், கத்தியால் குத்தி கொலை செய்து சிறுமியின் உடலை இடிபாடுகளுக்கிடையே வீசியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி