RCB vs LSG: 182 இலக்கை எட்டுமா பெங்களூரு

77பார்த்தது
RCB vs LSG: 182 இலக்கை எட்டுமா பெங்களூரு
பெங்களூருவில் இன்று நடந்த ஆர்சிபி vs எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டி காக் 81 ரன்களுடன் சிறப்பாக ஆடினார். பூரன் 40* ரன்களும், ஸ்டோனிஸ் 24 ரன்களும், ராகுல் 20 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு பந்துவீச்சாளர்களில் மேக்ஸ்வெல் 2, சிராஜ், தயாள், டேப்லே ஆகியோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி