கரூர் மாநாட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது இந்த வழியாக பசுபதி பாளையம், நெரூர் மற்றும் மோகனூர் செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாகவும், ஆற்றின் அருகே பாதாள சாக்கடை செல்வதாலும் திடீரென சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் இரண்டு முறை இதுபோல் அடிக்கடி ஏற்படும் பள்ளத்தால் போக்குவரத்து ஏற்படுகிறது இதனை முழுமையாக தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் ஏற்பட்ட பள்ளத்தால் வேலை முடிந்து வீடு செல்லும் பொதுமக்கள் அவதி க்குள்ளாகினார் மேலும் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளம் ஏற்படும் போது சாலையில் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.