லாரி திடீரென வலதுபுறம் திருப்பியதால் டூவீலர்மோதி உயிரிழப்பு

65பார்த்தது
காருடையாம் பாளையத்தில் முன்னாள் சென்ற டிப்பர் லாரி திடீரென வலதுபுறம் திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி ஒருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கஸ்பா நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 33.

இவர் மார்ச் 3-ம் தேதி காலை 9: 15 மணியளவில், கோவையிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

காருடையாம்பாளையம் தனியார் கல்லூரி அருகே சென்றபோது,

கரூர், வெள்ளியணை அருகே உள்ள பொரணி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 51 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை, ரமேஷ் ஓட்டி சென்ற டூ வீலர்க்கு முன்னாள் சென்று, திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், வலது புறம் லாரியை திருப்பியதால், ரமேஷ் பாலசுப்பிரமணி ஒட்டிச் சென்ற லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்தார் ரமேஷ்.

உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரமேஷ் ஐ சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் அறிந்த ரமேஷின் தந்தை ராசன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை சாலை விதிகளுக்கு உட்படாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணி Andr வழக்கு பதிவு செய்துள்ளனர
க. பரமத்தி காவல்துறையினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி