பயனற்று இருந்த கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

61பார்த்தது
கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் சுமார் 60 ஆண்டிற்கு முன்பாக குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 30 ஆண்டு காலமாக கிணறு பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. குடிப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் சரியாக, விநியோகிக்காததாலும், போர்வெல்லில் உப்பு தண்ணீர் வருவதாலும் அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஊர் பொதுமக்களுடன் இணைந்து கிணறை தூர்வார முடிவெடுத்தனர்.

சுமார் 15 நாட்களுக்கு மேலாக ரூ. 75 ஆயிரம் செலவிட்டு 65 அடி ஆழமுள்ள கிணற்றில் 12 அடி தூர்வாரி கயிறு உதவியுடன் வாலி மூலம் குடிநீர் எடுப்பதற்கான அமைப்பை செய்துள்ளனர். இதனை திருவிழாவாக கொண்டாட கிணறு அருகே உள்ள காளியம்மன், விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கிணற்றில் தண்ணீர் எடுத்தனர். சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உற்சாகத்துடன் தண்ணீரை பருகினர்.

.

தொடர்புடைய செய்தி