டி என் பி எல் அருகே லாரியின் கேபினில் தூங்கிய கிளீனர் கீழே விழுந்து விபத்து.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் வயது 39. இவர் லாரி டிரைவர்.
இவரது லாரியில் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் வயது 38 என்பவர் கிளீனர் ஆக பணியாற்றி வந்தார்.
இவர்களது லாரி ஜூலை 25ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் அமைந்துள்ள ரயில்வே கேட் அருகே வந்தபோது, லாரியின் கேபினில் தூங்கிக் கொண்டிருந்த இளவரசன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இளவரசனுக்கு வலது கால் முட்டியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.