ரெங்கபாளையம்- சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது.

77பார்த்தது
ரெங்கபாளையத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை குறித்து மதுவிலக்கு பிரிவு பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகாமிக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புன்னம் அருகே உள்ள பெரிய ரங்கபாளையத்தில் வசித்து வரும் பாலச்சந்திரன் மனைவி வளர்மதி வயது 52 என்பவர் அவரது வீட்டின் பின்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் விற்பனைக்காக வைத்திருந்த 29 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி