அரவக்குறிச்சி- ஆட்சி மாறும். காட்சி மாறும் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க இயலாது. சூளுரைத்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்டம்,
அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பேரூர் கழக நகர செயலாளர் இளமதி தலைமையில் நேற்று அக்டோபர் 15 ஆம் தேதி இரவு
நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திருவிக, பள்ளபட்டி நகர செயலாளர் சாதிக் பாஷா,
மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர்
மருத்துவர் பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள்
அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார்.
அப்போது தமிழகத்தில் திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 18 மாதங்களே உள்ளது. ஆட்சி மாறும். காட்சியும் மாறும். அதிமுக ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என சூளுரைத்தார்.