உ.பி., மாநிலம் சஹரன்பூரில் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சனையை தராததால் HIV வைரஸ் கொண்ட ஊசியை தனக்கு செலுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மாமியார், கணவர், அவரது சகோதர, சகோதரிகள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் SUV காரை வரதட்சனையாக ஏற்கனவே கொடுத்ததாகவும், மேலும் ரூ.10 லட்சம் ரொக்கம், பெரிய SUV காரை வரதட்சனையாக தரச் சொல்லி கொடுமைப்படுத்தி வருவதாகவும் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.