உழவர் சந்தை- டூவீலரை களவாட வந்த இளைஞர் கையும் களவுமாக கைது.

70பார்த்தது
உழவர் சந்தை அருகே டூவீலரை களவாட வந்த இளைஞர் கையும் களவுமாக கைது.


கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் வயது 56.

இவர் ஜூலை 29ஆம் தேதி இரவு 8: 15- மணி அளவில், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை அருகே தனது டூவீலரில் வந்திருந்தார்.

அப்போது அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக டூவீலரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

அப்போது , திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சூரணம் பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சிவா வயது 26 என்பவர், சண்முகசுந்தரம் நிறுத்தி இருந்த டூவீலரை களவாட முயன்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிவாவை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும், இது தொடர்பாக சண்முகசுந்தரம் காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி