2025 ஆம் ஆண்டு இரண்டு மங்கள கிரகங்களான சந்திரனும் வியாழனும் (குரு) மிதுன ராசியில் இணைய உள்ளதால் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது. இந்த கஜகேசரி யோகத்தால் 2025-ம் ஆண்டு, மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். நிதி நிலையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்படும். மேலும், புதிய முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும். கடின உழைப்பால் எதையும் சாதித்து விடும் அளவுக்கு உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.