வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த முதியவர் மீது வழக்கு.

84பார்த்தது
நாணபரப்பு- வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த முதியவர் மீது வழக்கு.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 60.

இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த திருமேனி அருணாச்சலம் வயது 70- என்பவர் கடந்த ஆண்டு 5 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுள்ளார்.

ஒப்புக்கொண்டபடி திருமேனி அருணாச்சலம் மனோஜ் பிரபாகருக்கு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

இதனால் பாலசுப்பிரமணி தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு திருமேனி அருணாச்சலத்திடம் கேட்டபோது, இரும்பு கம்பியை காட்டி மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருமேனி அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி